
நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது
பசுந்தறையில் அமர்ந்து நீயும்
பாட்டுப்பாடையில் - சுற்றி
மரத்தில் இருந்து
ரசிக்கிறது குயிலினங்களே
பனி விழும் பாதைதனில்
பயணம் செல்கையில் - நீ
இறுக்கிப் பிடித்த கைவழியே
என்னிதயம் உறையுதே
உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே






